உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / வேன் மோதி விவசாயி பலி

வேன் மோதி விவசாயி பலி

மயிலாடுதுறை:குத்தாலத்தில் வேன் மோதி விவசாயி இறந்தார்.மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த மேக்கிரிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சிவராமன்,40; விவசாயியான இவர், நேற்று காலை 10:30 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து குத்தாலத்திற்கு பைக்கில் சென்றார். அப்போது, குத்தாலம் தேரடி அருகே சென்றபோது, எதிரே வந்த மினி லோடு வேன் மோதியது. அதில் படுகாயமடைந்த சிவராமனை, அங்கிருந்தவர்கள் மீட்டு குத்தாலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரில் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.குத்தாலம் போலீசார் வழக்கு பதிந்து வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ