உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / அண்ணன் மனைவியரிடம் தொடர்பு கொழுந்தன் வெட்டிக்கொலை

அண்ணன் மனைவியரிடம் தொடர்பு கொழுந்தன் வெட்டிக்கொலை

மயிலாடுதுறை:அண்ணன் மனைவியரிடம் கள்ளத்தொடர்பு வைத்திருந்த கொழுந்தன் வெட்டி கொலை செய்யப்பட்டார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா, பெரிய குத்தவக்கரை வீரனார் கோவில் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன், 35. ஆணைக்காரன் சத்திரம் கொள்ளிடம் ஆற்றங்கரையில் வசிக்கும் தன் பெற்றோரை பார்க்க இவர் செல்வது வழக்கம். அப்போது, பெற்றோர் வீட்டின் அருகே வசிக்கும் தன் பெரியப்பா சம்பந்தம் மகன் ராமச்சந்திரனின் மனைவியர் சசிகலா, சத்தியரசி ஆகியோருடன் லட்சுமணனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது ராமச்சந்திரனுக்கு தெரிய வந்ததால் பகை ஏற்பட்டது. குடும்பத்தார் எச்சரித்ததால் லட்சுமணன் சென்னை, ஆவடியில் தங்கினார். ராமச்சந்திரன், அவரது உறவினர் வல்லம்படுகை ராகுல் உள்ளிட்ட 4 பேர் நேற்று முன்தினம் சென்னை சென்று லட்சுமணனை வலுக்கட்டாயமாக அழைத்து வந்தனர். நேற்று காலை பெரிய குத்தவக்கரை ராஜன் வாய்க்காலில் லட்சுமணன் சடலமாக கிடந்தார். கழுத்து அறுபட்டு, உடலின் பல்வேறு இடங்களில் பலத்த காயம் இருந்தது. லட்சுமணனை, ராமச்சந்திரன், ராகுல் உள்ளிட்ட 4 பேர் வெட்டி படுகொலை செய்துள்ளதாக, ஆணைக்காரன் சத்திரம் போலீசில் அவரது மனைவி அஞ்சலி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவான ராமச்சந்திரன், ராகுல் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். லட்சுமணனை தீர்த்துக் கட்டப்போவதாக மிரட்டல் வருவதாக, அஞ்சலி போலீசில் புகார் அளித்தும், போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதனால் அவர் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்த மறுநாளே, அவரது கணவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Keshavan.J
செப் 22, 2025 12:58

ராமச்சந்திரனின் மனைவியர் சசிகலா, சத்தியரசி ஆகியோருடன் லட்சுமணனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. என்ன ஒரு கேவலமான காரியம். சொரியார் தத்துவத்தை சரியாக பின் பற்றி இருக்கிறான்


KOVAIKARAN
செப் 22, 2025 09:49

இந்தக் கொலைக்கு மூல காரணமான அந்த இரண்டு அண்ணிகளுக்கு எதிராக அவர்களின் கணவர் என்ன நடவடிக்கை எடுத்தார்? குடும்பத்தார் திட்டியதால், அந்தப் பெண்களின் சகவாசம் வேண்டாம் என்று சொந்த ஊரை விட்டு சென்னைக்குச் சென்றவரை இழுத்து வந்து ஏன் கொலை செய்தார்கள்? அல்லது உண்மையான காரணம் வேறு ஏதோவா? கணவர் உயிருக்கு ஆபத்து என்று இறந்தவரின் மனைவி போலீஸ் புகார் கொடுத்த மறுநாளே இந்தக் கொலை நடந்துள்ளது. இதில் அந்த உள்ளூர் போலீஸ் க்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? இது போன்ற இன்னும் பல கேள்விகள் இந்த வழக்கில் கேட்கவேண்டி வரும்.


நிக்கோல்தாம்சன்
செப் 22, 2025 04:24

மிகுந்த வேதனையான நிகழ்வு , ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை இன்றைய நிலையில் எங்கே போயுள்ளது பாலிடாயில் ?