காதலர்கள் தற்கொலை; கலெக்டர் ஆபீஸ் முற்றுகை
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சாத்தங்குடியில், 17 வயது சிறுமியும், 19 வயது வாலிபர் பார்த்திபனும் காதலித்த நிலையில், ஜூன் 30ல் துாக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டனர். ஆணவ படுகொலை செய்யப்பட்டதாக, பார்த்திபன் உறவினர்கள் சிறுமியின் வீடு, அவரது உறவினர்கள் வீடுகளை சூறையாடினர். காதல் ஜோடி தற்கொலை சம்பவத்தை, ஆணவ படுகொலையாக சித்த ரித்து, சிறுமி குடும்பத்தாரின் வீடுகளை சேதப்படுத்தியதோடு, சிறுமியின் தந்தை உட்பட 5 பேர் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ததை கண்டித்தும், பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு அரசு உ ரிய நிவாரணம் வழங்க கோரியும், மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு, வன்னியர் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், நேற்று கலெக்டர் ஆபீஸ் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.