மேலும் செய்திகள்
....
23-Nov-2025
....
22-Nov-2025
மீனவர்கள் 14 பேர் கைது
10-Nov-2025
தருமை ஆதீனம் மணி விழா: மிருகங்களுக்கு பூஜை
08-Nov-2025
மயிலாடுதுறை: சீர்காழி அருகே குடிபோதையில் நண்பரை அடித்து கொலை செய்தவரை, போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருத்தோணிபுரத்தைச் சேர்ந்தவர்கள் கண்ணன், 43; கொத்தனார் மற்றும் ராஜா, 43; டிரைவர். நண்பர்களான இருவரது மனைவியரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டனர். இதனால், இருவரும் தினமும் இரவு ஒன்றாக மது அருந்துவது வழக்கம். நேற்று முன்தினம் இரவும் ஒன்றாக மது அருந்திய போது தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜா, கண்ணனை தாக்கினார். அப்போது தடுமாறி கீழே விழுந்த கண்ணனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த ராஜா, உடனடியாக கண்ணனை, '108 ஆம்புலன்ஸ்' மூலம் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார். தகவலறிந்த சீர்காழி போலீசார் வழக்கு பதிந்து, ராஜாவை கைது செய்தனர்.
23-Nov-2025
22-Nov-2025
10-Nov-2025
08-Nov-2025