ஓடும் ரயிலில் சிறுமியிடம் அத்துமீறியவர் கைது
மயிலாடுதுறை : தஞ்சாவூரில் இருந்து சென்னை செல்லும் 'உழவன்' எக்ஸ்பிரஸ் ரயிலில், நேற்று முன்தினம் இரவு தஞ்சாவூர் வேட்டுக்கார தெருவைச் சேர்ந்த சுந்தரவேல், 57, பயணம் செய்தார். சீர்காழி அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது, அதே பெட்டியில் பயணித்த, 14 வயது சிறுமியிடம் சுந்தரவேல் பாலியல் சில்மிஷம் செய்தார்.சிறுமி சத்தம் போடவே, அருகில் இருந்த பெற்றோர் மற்றும் பயணியர் சுந்தரவேலுவை பிடித்து ரயிலில் பாதுகாப்பிற்கு வந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் படி, மயிலாடுதுறை ரயில்வே போலீசார், போக்சோ வழக்கு பதிந்து, சுந்தரவேலை கைது செய்து மயிலாடுதுறை கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர்.