உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / பள்ளி வாகனம் மீது கல் வீசி தாக்கியவருக்கு மாவு கட்டு

பள்ளி வாகனம் மீது கல் வீசி தாக்கியவருக்கு மாவு கட்டு

மயிலாடுதுறை: பள்ளி வாகனம் மீது கல் வீசி தாக்கி, குழந்தைகளை அச்சுறுத்திய மூவரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பூவம் பகுதி தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளியில், நவ., 7ல் பள்ளி முடிந்து, வேனில் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். மயிலாடுதுறை மாவட்டம், மாங்குடி என்ற இடத்தில் குடிபோதையில் நின்றிருந்த சில வாலிபர்கள், பள்ளி வாகனத்தை வழிமறித்து கற்களை வீசி தாக்கினர். பொறையார் போலீசார், பூதனுாரை சேர்ந்த ஆகாஷ், 20, கபிலன், 20, தாமரைச்செல்வன், 23, ஆகிய மூவர் மீது, ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். அப்போது, தப்பியோடிய ஆகாஷ் விழுந்ததில், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அவருக்கு மருத்துவமனையில் மாவு கட்டு போடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ