உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / வன்னியர் சங்க நிர்வாகி கொலை: 9 பேருக்கு ஆயுள்

வன்னியர் சங்க நிர்வாகி கொலை: 9 பேருக்கு ஆயுள்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை, கொத்த தெருவை சேர்ந்த வன்னியர் சங்க நகர தலைவர் கண்ணன், 27; இவருக்கும், மயிலாடுதுறை, கலைஞர் நகரை சேர்ந்த கதிரவன், 41, என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. கடந்த 2022 ஆக., 17ல் கண்ணன், அவரது நண்பர் ரஞ்சித் டூ - வீலரில் மயிலாடுதுறை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே வந்தபோது, கதிரவன், அவரது நண்பர்கள் சேர்ந்து கண்ணனை அரிவாளால் வெ ட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக, கதிரவன் உள்ளிட்ட 22 பேர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இதனிடையே, 2024 மார்ச் 20ல் கண்ணன் கொலையில் தொடர்புடைய அஜித்குமார், 26, வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், கண்ணன் சகோதரர் சந்திரமோகன் உள்ளிட்ட 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கண்ணன் கொலை வழக்கில் மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணை முடிந்து, நீதிபதி சத்தியமூர்த்தி தீர்ப்பளித்தார். கதிரவன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனையும் தலா, 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், 12 பேர் விடுவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை