மேலும் செய்திகள்
நங்கவரம் டவுன் பஞ்., சாதாரண கூட்டம்
01-Oct-2024
மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா மடப்புரத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் சீகன்பால், 17. ஆக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இவர் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து, வீடு திரும்பும்போது வழியில் மழைக்காக பஸ் நிறுத்தத்தில் ஒதுங்கினார். அங்கு நின்றிருந்த ஆக்கூர் சிவமட விளாகத்தைச் சேர்ந்த யோகேஷ் என்பவருக்கும், சீகன்பாலுக்கும் தகராறு ஏற்பட்டது.அங்கிருந்து சென்ற யோகேஷ், அவரது தந்தை அமிர்தலிங்கம் மற்றும் தம்பியுடன் திரும்பி வந்து தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த அமிர்தலிங்கம், கையில் வைத்திருந்த பைக் சாவியால் குத்தியதில், சீசன்பால் இடது பக்க தொண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து மூவரும் தப்பிச் சென்றனர்.உயிருக்கு போராடிய சீகன்பாலை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். செம்பனார் கோவில் போலீசார் வழக்கு பதிந்து, அமிர்தலிங்கம், 47, அவரது மூத்த மகன் யோகேஷ், 18, மற்றும் 17 வயது இளைய மகன் ஆகிய மூவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அமிர்தலிங்கம், யோகேஷ் ஆகிய இருவரும் பொறையார் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். 17 வயது சிறுவன் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
01-Oct-2024