உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / மாணவன் தற்கொலை முயற்சி ஆசிரியர்கள் மீது வழக்கு

மாணவன் தற்கொலை முயற்சி ஆசிரியர்கள் மீது வழக்கு

மயிலாடுதுறை:மயிலாடுதுறை அடுத்த சோழம்பேட்டையைச் சேர்ந்தவர் மணிமாறன். லாரி டிரைவர். இவரது மகன் மனோஜ்குமார்,16, மயிலாடுதுறை தியாகி ஜி நாராயண சுவாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். இவர் பள்ளிக்கு சரியாக வராததால், வகுப்பு ஆசிரியர் தங்கப்பன், மாணவனின் பெற்றோரை அழைத்துவரக் கூறியுள்ளார்.கடந்த 6ம் தேதி பெற்றோரை அழைத்துச் செல்லாமல் பள்ளிக்கு சென்ற மனோஜ்குமாரை, ஆசிரியர் தங்கப்பன் அடித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், நேற்று முன்தினம் மீண்டும் பள்ளிக்கு சென்ற மனோஜ்குமாரை தங்கப்பன், தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் ஆகியோர் அடித்ததாகக் கூறப்படுகிறது.அதில் மனமுடைந்த மனோஜ்குமார், தற்கொலை செய்ய எண்ணி, எலி மருந்தை வாங்கி சாப்பிட்டார். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதையடுத்து, மயிலாடுதுறை போலீசார் நேற்று, ஆசிரியர்கள் தங்கப்பன், தாமரைச்செல்வன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை