உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / தைவான் ஜோடிக்கு இந்து முறைப்படி திருமணம்; ஒளிலாயம் சித்தர் பீடத்தில் கோலாகலம்

தைவான் ஜோடிக்கு இந்து முறைப்படி திருமணம்; ஒளிலாயம் சித்தர் பீடத்தில் கோலாகலம்

மயிலாடுதுறை: சீர்காழி அருகே ஒளிலாயம் சித்தர் பீடத்தில் தைவான் நாட்டு ஜோடிக்கு இந்து முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா காரைமேடு ஒளிலாயம் சித்தர்பீடம் உள்ளது. இங்கு 18 சித்தர்கள் தனி தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். மேலும், இங்கு 18 படி விநாயகர் சந்நிதியுடன் கூடிய மகாலிங்கமும் அமைந்துள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க ஒளிலாயம் சித்தர் பீடத்தில் பவுர்ணமி வழிபாடு நடைபெறும், மேலும், இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து வந்து வழிபாடு செய்வது வழக்கம்.இந்த நிலையில், சித்தர்பீடத்தில் தைவான் நாட்டை சேர்ந்த இமிங், சுஹூவா இருவரும் காதலித்து வந்த நிலையில் இந்தியாவில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளனர். இதனையடுத்து, தமிழகம் வந்த இருவரும் இந்து முறைப்படி ஒளிலாயம் சித்தர் பீடத்தில் அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தைவான் நட்டிலிருந்து வந்திருந்த இருவரின் உறவினர்களும் தமிழக கலாச்சாரத்தில் பட்டு வேஷ்டி, பட்டு சேலை அணிந்து வந்து திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.வெளிநாட்டினர் திருமணத்தில் சுற்றுவட்டார பகுதி கிராம மக்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். சிவாச்சாரியார்கள் அருண், கணேஷ் திருமணத்தை நடத்தி வைத்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Barakat Ali
ஜன 09, 2025 20:03

சின்ன ஜோக்கர் எப்படி சனாதனத்தை ஒழிப்பாரு ????


Barakat Ali
ஜன 09, 2025 08:43

சார்.. சார்.. சின்ன சார்.. சநாதனத்தை எப்படி ஒழிக்கப்போறீங்க சார் ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை