உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / கோவில் உண்டியலை உடைத்து ரூ.3.5 லட்சம் திருடிய மூவர் கைது

கோவில் உண்டியலை உடைத்து ரூ.3.5 லட்சம் திருடிய மூவர் கைது

மயிலாடுதுறை:கோவில் உண்டியலை உடைத்து ரூ 3.5 லட்சம் பணம் திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தேவார பாடல் பெற்ற சட்டைநாதர் கோவில் தெற்கு கோபுர வாசலில் ஆபத்து காத்த விநாயகர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் சுக்கிர வார பூஜை முடிந்து நள்ளிரவு நடை சாத்தப்பட்டது. நள்ளிரவு 1.30 மணிக்கு சத்தம் கேட்டு கோவில் ஊழியர்கள் தெற்கு கோபுர வாசலுக்கு வந்து பார்த்தபோது, விநாயகர் கோவில் உண்டியல் உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.தகவலறிந்த ரோந்து பணியில் இருந்த பொறையார் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் ஹைவே ரோந்து போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்து சோதனையிட்டதில் சந்தேகிக்கும் வகையில் சென்ற சீர்காழி அய்யனார் கோவில் தெரு சங்கரன் மகன் கொளஞ்சி, 45; அவரது சகோதரர் முத்து, 35; விளந்திட சமுத்திரத்தைச் சேர்ந்த இளங்கோவன் மகன் இலக்கியன், 29; ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில், மூவரும் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியது தெரியவந்தது.இதனையடுத்து மூவருடன், மூட்டையாக கட்டி வைத்திருந்த ரூ.3.5 லட்சம் பணத்தை சீர்காழி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். தொடர்ந்து மூவரையும் கைது செய்த சீர்காழி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை