உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / ரயில் மோதி வாலிபர் பலி

ரயில் மோதி வாலிபர் பலி

சீர்காழி ரயில்வே ஸ்டேஷன் அருகே இருப்புப் பாதையை கடக்க முயன்ற வாலிபர் ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோவிந்தராஜ் நகர் சேர்ந்தவர் கண்ணன் மகன் கார்த்திகேயன்.24. பட்டப்படிப்பு முடித்த இவர் தற்போது உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் இன்று மாலை சீர்காழி ரயில்வே ஸ்டேஷன் நடைமேடை முடியும் இடத்தில் கார்த்திகேயன் இருப்பு பாதையை கடக்க முயன்றுள்ளார் அப்போது மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ரயில் மோதியதில் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே கார்த்திகேயன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் கார்த்திகேயன் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும் ஒரு முறை காரைக்காலில் தற்கொலைக்கு முயன்றதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை