மேலும் செய்திகள்
வி.ஏ.ஓ., கொலையில் 2 திருநங்கையர் கைது
10-Nov-2025
முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வி.ஏ.ஓ., கொடூர கொலை
09-Nov-2025
நாகை மீனவர்கள் 31 பேர் சிறைபிடிப்பு
04-Nov-2025
அரட்டை செயலியில் புதிய அப்டேட்: ஸ்ரீதர் வேம்பு
29-Oct-2025 | 1
நாகப்பட்டினம் : இந்தியா - இலங்கை இடையே வர்த்தகம், சுற்றுலா மேம்பட பயணியர் கப்பல் போக்குவரத்தை, கடந்தாண்டு அக்., 14ல் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். சில தினங்களிலேயே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின், கப்பல் போக்கு வரத்து சேவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த மே மாதம் கப்பல் போக்குவரத்து துவங்கும் என்று அறிவிக்கப்பட்டாலும் துவக்கப்படவில்லை. சில நாட்களுக்கு முன், 'சிவகங்கை' என்ற சிறிய கப்பல் நாகை வந்து, சோதனை ஓட்டம் நடந்தது.இந்நிலையில், வரும் 16ம் தேதி முதல், இலங்கைக்கு பயணியர் கப்பல் போக்குவரத்து துவங்க உள்ளதாக தனியார் கப்பல் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இக்கப்பல் 16ம் தேதி காலை 8:00க்கு நாகையில் இருந்து புறப்பட்டு, பகல் 12:00 மணிக்கு, இலங்கை காங்கேசன் துறை சென்றடையும். அங்கிருந்து மதியம் 2:00க்கு புறப்பட்டு மாலை 6.00 மணிக்கு நாகை வந்தடையும். கப்பலின் கீழ் தளத்தில் பயணிக்க 5,000 ரூபாய், மேல் தளத்தில் பயணம் செய்ய 7,500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.ஆன்லைன் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அந்த கப்பல் நிறுவனம் அறிவித்துஉள்ளது.
10-Nov-2025
09-Nov-2025
04-Nov-2025
29-Oct-2025 | 1