மீனவர்கள் மீதான தாக்குதல்: விஜய் கட்சி கண்டனம்
நாகப்பட்டினம், : இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நடத்தியதற்கு, விஜய் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.விஜய் துவக்கியுள்ள த.வெ.க., சார்பில் நாகையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பங்கேற்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நாகை வந்தார். கடந்த 10ம் தேதி, இலங்கை கடற்படை கப்பல் மோதியதில், பாதிக்கப்பட்ட மீனவர்களை செருதுாரில் சந்தித்து ஆறுதல் கூறி, நடந்த சம்பவங்களை கேட்டறிந்தார்.பின் பாதிக்கப்பட்ட பைபர் படகு உரிமையாளர் தர்மருக்கு நிதியுதவி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கடல் பரப்பில் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது. மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மீனவர்களுக்கு மொட்டை அடித்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்களை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும். மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் நடவடிக்க எடுக்க வேண்டும் என, தெரிவித்தார்.