உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / வேளாங்கண்ணியில் பெரிய சப்பர பவனி

வேளாங்கண்ணியில் பெரிய சப்பர பவனி

நாகப்பட்டினம்,:நாகை அடுத்த வேளாங்கண்ணியில், கீழை நாடுகளின் லுார்து என்றழைக்கப்படும் ஆரோக்கியமாதா சர்ச்சில், ஆண்டுத் திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.முக்கிய நிகழ்வாக நேற்றிரவு தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற கூட்டு திருப்பலி நடந்தது.இந்நிகழ்ச்சியில், சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் மும்மத பிரமுகர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து பெரிய சப்பர பவனி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து இன்று மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, காலை 6:00 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில், விண்மின் சர்ச்சில் கூட்டுப் பாடல் திருப்பலி நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு சர்ச் வளாகத்தில் ஏற்றப்பட்டிருக்கும், மோர்க்கார சிறுவனுக்கு காட்சியளித்த மாதாவின் திருவுருவம் பொறித்த கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ