மேலும் செய்திகள்
போக்சோவில் கைதான போலீஸ்காரர் டிஸ்மிஸ்
20-Nov-2025
வி.ஏ.ஓ., கொலையில் 2 திருநங்கையர் கைது
10-Nov-2025
முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வி.ஏ.ஓ., கொடூர கொலை
09-Nov-2025
நாகப்பட்டினம் : நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம், சாறுமடை கடைத்தெருவில் மளிகை கடை நடத்தி வந்தவர் குமரேசன், 35. இவரது மனைவி புவனேஸ்வரி, 28. அதே பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருந்தனர்.திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது; குழந்தை இல்லை. வியாபார அபிவிருத்திக்காக அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் குமரேசன் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. தொழில் சரி வர நடக்காததால், கடன்களை திருப்பிக் கொடுக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்தார்.இது குறித்து நேற்று முன்தினம் இரவு தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று அதிகாலை மொட்டை மாடியை ஒட்டிச் சென்ற உயர் அழுத்த மின் ஒயரை, குமரேசன் பிடித்து தற்கொலை செய்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரியும் மின் ஒயரை பிடித்து தற்கொலை செய்தார். கடன் பிரச்னையால் இளம் தம்பதி விபரீத முடிவை தேடியது, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.
20-Nov-2025
10-Nov-2025
09-Nov-2025