உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / தி.மு.க., பிரமுகரை கண்டித்து த.வெ.க., ஆர்ப்பாட்டம்

தி.மு.க., பிரமுகரை கண்டித்து த.வெ.க., ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்: நாகை அருகே பெண்களை தாக்கிய தி.மு.க., பிரமுகரை கைது செய்ய வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட, த.வெ.க.,வினரை போலீசார் அடித்து உதைத்து கைது செய்தனர்.நாகைக்கு கடந்த 3ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் வந்தபோது, வருவாய்த் துறை சார்பில் 8,774 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதில், கருங்கண்ணியைச் சேர்ந்த 26 பயனாளிகளும் அடங்குவர். திடீரென இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது.

கலெக்டரிடம் மனு

இதைக் கண்டித்து, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலர் சுகுமார் தலைமையில், கடந்த 5ம் தேதி கலெக்டரிடம் மனு அளித்தனர்.இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க., கருங்கண்ணி முன்னாள் பஞ்., துணைத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில், அவரது ஆதரவாளர்கள், புகார் அளித்தவர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. படுகாயமடைந்த பரமேஸ்வரி, சித்ரா, ராகிணி உட்பட நான்கு பேர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.தாக்குதலில் ஈடுபட்ட தி.மு.க.,வினரை கைது செய்ய வலியுறுத்தி, மேலப்பிடாகையில், த.வெ.க., மாவட்ட செயலர் சுகுமார், மாவட்ட மகளிரணி செயலர் சுகன்யா தலைமையில், 500க்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தள்ளுமுள்ளு

அப்போது தி.மு.க., கீழையூர், கிழக்கு ஒன்றிய செயலர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் அங்கு வந்து எதிர் கோஷம் எழுப்பினர். பதிலுக்கு த.வெ.க.,வினரும் கோஷம் எழுப்பினர். 'த.வெ.க.,வினரை அப்புறப்படுத்தினால் மட்டுமே அங்கிருந்து நகருவோம்' என, தி.மு.க.,வினர் கூறியதால், த.வெ.க.,வினரை போலீசார் கைது செய்ய முயற்சித்தனர்.த.வெ.க., முக்கிய பிரமுகர்களை போலீசார் சுற்றி வளைத்து, வாகனத்தில் ஏற்ற முயற்சித்த போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த த.வெ.க., தொண்டர்கள் வாகனத்தின் முன் படுத்தனர். அவர்களை அடித்து, உதைத்து போலீசார் வேனில் ஏற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ