மேலும் செய்திகள்
போக்சோவில் கைதான போலீஸ்காரர் டிஸ்மிஸ்
20-Nov-2025
வி.ஏ.ஓ., கொலையில் 2 திருநங்கையர் கைது
10-Nov-2025
முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வி.ஏ.ஓ., கொடூர கொலை
09-Nov-2025
நாகப்பட்டினம் : சீமான் பிரசாரத்தின் போது, தாரை, தப்பட்டை முழங்க ஊர்வலமாக வந்த தி.மு.க., கூட்டணி பிரசார வாகனத்தை, நாம் தமிழர் கட்சியினர் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.நாகை, அபிராமியம்மன் திருவாசலில், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பிரசாரம் செய்தார். அங்கு ஏராளமான அக்கட்சி தொண்டர்கள் குவிந்திருந்தனர்.அப்போது, நாகை நகர பகுதியில், தி.மு.க., நகர செயலர் மாரிமுத்து தலைமையில், ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த இந்திய கம்யூ., வேட்பாளர் செல்வராஜ் மற்றும் கூட்டணி கட்சியினர் அவ்வழியே வந்தனர். பிரசார வாகனத்தின் உள்ளே சீமான் அமர்ந்திருந்தார். நீலாயதாட்சியம்மன் கோவில் வாசல் அருகே தி.மு.க., கூட்டணியினரை மறித்த போலீசார், மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தினர். இதனால் போலீசாருக்கும், தி.மு.க.,வினருக்கும் வாக்குவாதம் எழுந்தது. போலீசாரை மீறி தி.மு.க., கூட்டணியினர், மேள, தாளம், தாரை, தப்பட்டை முழங்க முன்னேறி சென்றனர். தி.மு.க., கூட்டணி பிரசார வாகனத்தை, நாம் தமிழர் கட்சியினர் நிறுத்தியதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டு, மோதல் சூழல் நிலவியது. போலீசார் இரு தரப்பையும் சமாதானம் செய்து, இந்திய கம்யூ., வேட்பாளர் வாகனத்தை அனுப்பி வைத்தனர்.சீமான் பேசியதாவது:காவல் துறை இந்த இடத்தை எங்களுக்கு தந்திருக்கக் கூடாது. இல்லை, அவர்களை இவ்வழியில் அனுமதித்திருக்கக் கூடாது. இரண்டையும் விட்டு இரு தரப்பையும் மோத விடுவது என்ன சட்டம், என்ன ஒழுங்கு?நாங்கள் கண்ணியத்தோடு இருந்ததால் கலவரம் தவிர்க்கப்பட்டது. இல்லாவிட்டால் இரு தரப்பும் மருத்துவமனையில் இருந்திருப்போம். முதல்வர் ஸ்டாலினும், உதயநிதியும், '1,000 ரூபாய் கொடுத்தோம்; வந்ததா?' என கேட்பதை தவிர, வேறு எதுவும் பேசுவது கிடையாது. இல்லையென்றால் உதயநிதி, பழனிசாமி மண்டியிட்டார், தவழ்ந்தார், படுத்தார், துாங்கினார் என்பதை தவிர வேறு எந்த பேச்சும் கிடையாது. நான் அமைதியாக இருந்ததால், அமைதியாக சென்றீர்கள். இல்லை மருத்துவமனை தான்.இவ்வாறு சீமான் பேசினார்.
20-Nov-2025
10-Nov-2025
09-Nov-2025