உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / பெண்கள் குறித்து அவதுாறு: அ.தி.மு.க., பிரமுகர் கைது

பெண்கள் குறித்து அவதுாறு: அ.தி.மு.க., பிரமுகர் கைது

நாகப்பட்டினம்; நாகையில், கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் இரு சமூக பெண்கள் குறித்து அ.தி.மு.க., பிரமுகர் அவதுாறாக பேசிய ஆடியோ வெளியானதை தொடர்ந்து, அ.தி.மு.க., பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.நாகை, பெருங்கடம்பனுாரை சேர்ந்தவர் சிலம்பரசன்,38. அ.தி.மு.க., ஜெ., பேரவை மாவட்ட துணை செயலாளர். இவருக்கும் வேறொரு நபருக்கும் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருப்பதாக கூறப்படுகிறது. மற்றொரு நபரிடம் மொபைலில் பேசிய சிலம்பரசன், இரு சமூக பெண்கள் குறித்து அவதுாறான வார்த்தையில் பேசியது, சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.இதையடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நாகூர் போலீசார், சிலம்பரசனை கைது செய்தனர்.இதற்கிடையில் வி.சி., கட்சி நாகை, சட்டசபை தொகுதி பொறுப்பாளர் அறிவழகன் தலைமையில் அக்கட்சியினர், அ.தி.மு.க., பிரமுகரை கண்டித்து, நாகை-காரைக்கால் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை