மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
18-Mar-2025
நாகப்பட்டினம்:நாகை மாவட்டம், திட்டச்சேரியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 24.வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 5 லட்சம் ரூபாய் கடனுதவி கோரி, மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பித்தார்.மாவட்ட தொழில் மைய பரிந்துரைப்படி, ஐ.ஓ.பி., வங்கியால் 5 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டது. அரசு மானியமாக 1 லட்சத்து 25,000 ரூபாய் விடுவிக்க, மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் அன்பழகன், 57, சதீஷ்குமாரிடம் 12,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.நாகை லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று சதீஷ்குமார் கொடுத்தபோது, அன்பழகனை, கையும் களவுமாக கைது செய்தனர்.
18-Mar-2025