உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / தாயை கொலை செய்த பாசக்கார மகன் கைது

தாயை கொலை செய்த பாசக்கார மகன் கைது

நாகப்பட்டினம்:நாகை மாவட்டம், திருக்குவளை, ஏரித்திடலை சேர்ந்தவர் நாகூரான், 68. இவரது மனைவி மணியம்மாள், 65. இவர்கள் மகன் சுரேஷ், 33; திருப்பூரில் வேலை செய்து வந்த சுரேஷ், தீபாவளி பண்டிகைக்காக ஊருக்கு வந்துள்ளார். நவ.1ம் தேதி, மது போதையில் இருந்த சுரேஷ், மேலும் மது அருந்த தந்தையிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். அதை மணியம்மாள் கண்டித்தார்.ஆத்திரமடைந்த சுரேஷ், தாயை தாக்கினார். அதில், காயமடைந்த மணியம்மாள், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் நவ.5ம் தேதி இறந்தார். திருக்குவளை போலீசார் வழக்கு பதிந்து, சுரேஷை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை