உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / மீனவர்கள் மீது கொடூர தாக்கு கடற்கொள்ளையர் அட்டூழியம்

மீனவர்கள் மீது கொடூர தாக்கு கடற்கொள்ளையர் அட்டூழியம்

அக்கரைப்பேட்டை:நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டையை சேர்ந்த ராஜேந்திரன், 49, நாகலிங்கம், 45, ராஜ்குமார், 25, ஆகிய மீனவர்கள், கோடியக்கரையில் இருந்து 25 கடல் மைல் தொலைவில் கடந்த 20ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது, அங்கு இரு படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், கொடூர ஆயுதங்களால் ராஜ்குமார், ராஜேந்திரனை தலையில் தாக்கி, 300 கிலோ எடையுடைய வலை, வாக்கி டாக்கி மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்து தப்பினர்.அதேபோல், கோடியக்கரையில் இருந்து 20 கடல் மைல் தொலைவில், பைபர் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மயிலாடுதுறை மாவட்டம், பெருமாள்பேட்டையைச் சேர்ந்த மூன்று மீனவர்களை தாக்கி, 100 கிலோ எடையுடைய மீன்கள், வலையை பறித்துச் சென்றனர்.தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள், நேற்று காலை கோடியக்கரை திரும்பினர். படுகாயமடைந்த அக்கரைப்பேட்டை மீனவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை