உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / நாகப்பட்டினம் - துாத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை ரூ.200 கோடியில் சீரமைப்பு

நாகப்பட்டினம் - துாத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை ரூ.200 கோடியில் சீரமைப்பு

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் வழியாக நாகப்பட்டினம் முதல் துாத்துக்குடி வரை தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்த பகுதி வாரியாக பிரித்து ரூ.200 கோடியில் சீரமைக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளது.சென்னை செல்லும் பிரதான கிழக்கு கடற்கரை சாலையான நாகப்பட்டினம் முதல் துாத்துக்குடி வரை 400 கி.மீ., தேசிய நெடுஞ்சாலை உள்ளது. தொடர் பராமரிப்பின்றி பல்வேறு இடங்களில் ரோடுகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக முட்செடிகள் வளர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.ரோட்டை சீரமைக்க மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து மாவட்டங்களில் இருந்து திட்ட மதிப்பீடு தயார் செய்து டில்லியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையரகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.ராமநாதபுரம் வழியாக நாகபட்டினம் - துாத்துக்குடி வரை அந்தந்த மாவட்ட அதிகாரிகள் அறிக்கையின் படி நிதி அளிக்கப்படுகிறது.அதன்படி பகுதி வாரியாக தேசிய நெடுஞ்சாலையை ரூ.200 கோடியில் சீரமைக்கும் பணிகள் ஓரிரு மாதங்களில் துவங்க உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை