உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / துாய்மை கடற்கரை உருவாக்க நாகையில் மாரத்தான் ஓட்டம்

துாய்மை கடற்கரை உருவாக்க நாகையில் மாரத்தான் ஓட்டம்

நாகப்பட்டினம்:கடலையும், கடற்கரையையும் பாதுகாக்க வலியுறுத்தி, நாகையில், 5,000 பேர் பங்கேற்ற, 8 கி.மீ., துார மாரத்தான் ஓட்டம் நடந்தது.'பிளாஸ்டிக் இல்லாத கடலை காப்போம், துாய்மையான கடற்கரையை உருவாக்குவோம்' என்பதை வலியுறுத்தி, நாகையில், 5,000 பேர் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் நடந்தது.அக்கரைப்பேட்டை மீனவர்கள் சார்பில் நடந்த மாரத்தான் ஓட்டத்தை, கலெக்டர் அலுவலக வாயிலில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், டி.ஆர்.ஓ., பேபி ஆகியோர் கொடியசைத்து துவக்கினர். நான்கு பிரிவுகளாக நடந்த ஓட்டம், 8 கி.மீ., துாரம் கடந்து அக்கரைப்பேட்டையில் நிறைவடைந்தது. பங்கேற்ற அனைவருக்கும் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி