மேலும் செய்திகள்
போக்சோவில் கைதான போலீஸ்காரர் டிஸ்மிஸ்
20-Nov-2025
வி.ஏ.ஓ., கொலையில் 2 திருநங்கையர் கைது
10-Nov-2025
முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வி.ஏ.ஓ., கொடூர கொலை
09-Nov-2025
நாகப்பட்டினம்:நாகை மாவட்டம், கலசம்பாடியில், 1965ல் அரசு துவக்கப் பள்ளி கட்டப்பட்டு, 2015ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில், 119 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் கழிப்பறை வசதி இல்லாததால், மாணவ - மாணவியர் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.இதை அறிந்த, நாகையில் காய்கறி கடை நடத்தும் ரஜினிகாந்த் என்பவர், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று, தன்னார்வலர்கள் உதவியுடன், பள்ளியில் 3.50 லட்சம் ரூபாய் செலவில் நான்கு கழிப்றைகளை தண்ணீர் வசதியுடன் செய்தார்.அந்த கட்டடங்களை, மகளிர் தினமான நேற்று, கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் திறந்து வைத்து, மாணவ - மாணவியர் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இதற்கிடையே, மாணவியர் பள்ளிக்கு இதுவரை கழிப்பறை வசதி செய்து கொடுக்காமல் இருந்த, மாநில கல்வி நிர்வாகத்தை அப்பகுதி மக்கள் சாடினர்.
20-Nov-2025
10-Nov-2025
09-Nov-2025