உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வி.ஏ.ஓ., கொடூர கொலை

முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வி.ஏ.ஓ., கொடூர கொலை

நாகப்பட்டினம்: நாகையில் முகம் சிதைத்து வி.ஏ.ஓ.,வை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாகை மாவட்டம், வாழக்கரையை சேர்ந்தவர் ராஜாராம், 35; கிராம நிர்வாக அலுவலர். கடந்த ஆண்டு, திருவாய்மூரில் பணியாற்றிய போது, லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர், நேற்று முன்தினம் மாலை, காரைக்காலில் உள்ள தாய் வீட்டில் தங்கியுள்ள மனைவியை பார்க்க சென்றார். ஆனால், அங்கு அவர் செல்லாததால் உறவினர்கள் தேடியுள்ளனர். நேற்று காலை, இ.சி.ஆர்., சாலையில் செல்லுார் என்ற இடத்தில் முகம் சிதைக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் ராஜாராம் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் வெளிப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ