மேலும் செய்திகள்
பெண்ணை கொன்ற வழக்கு முதியவருக்கு ஆயுள் தண்டனை
10-Jan-2025
நாகப்பட்டினம்,:நாகை, மேலக்கோட்டை வாசல்படியைச் சேர்ந்தவர் கார்த்திகேசன், 36; இவரது மனைவி வள்ளி, 30; அதேபகுதியை சேர்ந்த காளியப்பன் மனைவி சுகன்யாவுடன் கார்த்திகேசனுக்கு தொடர்பு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக, கடந்த 2016ம் ஆண்டு தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. அவர்களை சுகன்யா சமாதானம் செய்ய முயன்றார். ஆத்திரமடைந்த வள்ளி, கொதிக்கும் எண்ணெயை, சுகன்யா மீது ஊற்றினார். அதில் படுகாயமடைந்த சுகன்யாவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.இதுகுறித்த புகாரின்படி, வள்ளியை கைது செய்த நாகை டவுன் போலீசார், அவர் மீது மகளிர் விரைவு கோர்ட்டில் கொலை வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கார்த்திகா, கொலை செய்த வள்ளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2.20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
10-Jan-2025