மேலும் செய்திகள்
கரூர் மாவட்ட வளர்ச்சி கண்காணிப்பு குழு கூட்டம்
21-Jan-2025
நாமக்கல், :நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு (திஷா) கூட்டம் நேற்று நடந்தது.எம்.பி., மாதேஸ்வரன் தலைமை வகித்தார். கலெக்டர் உமா, எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், பிரதம மந்திரி நீர்பாசன திட்டம், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், பாரம்பரிய வேளாண் வளர்ச்சித்திட்டம், சூரிய ஒளி சக்தியுடன் இயங்கக்கூடிய மின்மோட்டார் பம்புகள் வழங்கும் திட்டம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அதேபோல், தேசிய உணவு பாதுகாப்புச்சட்டம், மாவட்ட தொழில் மையம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், தேசிய அளவில் நிலஅளவை ஆவணங்களை நவீனமயமாக்குதல் திட்டப்பணிகளின் முன்னேற்றம் பற்றியும் விவாதிக்கப்பட்டது.தொடர்ந்து, பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, 'பணிகள் அனைத்தும், திட்ட வழிகாட்டி நெறிமுறைகளின்படி தரமாகவும், குறித்த நேரத்திலும் முடிக்க வேண்டும்' என, திஷாக்குழு தலைவர் மாதேஸ்வரன் அறிவுறுத்தினார்.துணை மேயர் பூபதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
21-Jan-2025