உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வரி கட்டாததால் குடிநீர் இணைப்பு கட் ராசிபுரம் நகராட்சி நடவடிக்கை

வரி கட்டாததால் குடிநீர் இணைப்பு கட் ராசிபுரம் நகராட்சி நடவடிக்கை

வரி கட்டாததால் குடிநீர் இணைப்பு 'கட்'ராசிபுரம் நகராட்சி நடவடிக்கைராசிபுரம்:ராசிபுரம் நகராட்சியில் வரி பாக்கியை வசூலிக்க, நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. பொது இடங்களில் பிளக்ஸ் பேனர்கள், நடமாடும் வரி வசூல் வாகனம், விடுமுறையிலும் வசூல் மையங்கள் திறப்பு என, பல்வேறு முயற்சிகள் எடுத்தும் இன்னும் எதிர்பார்த்த அளவு வசூல் ஆகவில்லை. இந்நிலையில், நேற்று, 26வது வார்டு பகுதியில் வரி கட்டாதவர்களின் குடிநீர் இணைப்பை, ஊழியர்கள் துண்டித்தனர்.இதுகுறித்து, ராசிபுரம் நகராட்சி கமிஷனர் கணேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ராசிபுரம் நகராட்சியில் சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் பொதுமக்களால் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. இதுகுறித்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் முன்னேற்றம் இல்லை. ராசிபுரம் நகராட்சியில் வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.இறுதி அறிவிப்புக்கு பின்னும், வரி செலுத்தாதவர்கள் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக அனைத்து வார்டுகளிலும் வரி செலுத்தாத வரிதாரர்கள் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை