உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முழு கொள்ளளவு எட்டிய ஓடப்பள்ளி தடுப்பணைகோடையில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு

முழு கொள்ளளவு எட்டிய ஓடப்பள்ளி தடுப்பணைகோடையில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு

முழு கொள்ளளவு எட்டிய ஓடப்பள்ளி தடுப்பணைகோடையில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வுபள்ளிப்பாளையம்:ஓடப்பள்ளி தடுப்பணையில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால், கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே, கடந்த, 2011ல் தடுப்பணை கட்டப்பட்டது. இதன் உயரம், 9 மீட்டர். இதில், அரை டி.எம்.சி., அளவு தண்ணீர் தேக்கி வைக்கப்படும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், இந்த ஓடப்பள்ளி தடுப்பணை நீர்த்தேக்க பகுதிக்கு வந்து சேரும். 9 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, அதன் வரத்தை பொறுத்து ஏற்ற, இறக்கத்துடன் மின் உற்பத்தி நடக்கும்.இந்த தடுப்பணையின் நீர்த்தேக்க பகுதியான ஆவத்திபாளையம் என்ற இடத்தில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு, பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. கடந்த, இரண்டு மாதமாக ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துவிட்டது. இதனால் மின் உற்பத்தியும் நடக்கவில்லை.கோடைகாலத்தில், மக்களுக்கு சீராக குடிநீர் வினியோகிக்கும் வகையில், ஆற்றில் வரும் தண்ணீரை, கடந்த சில நாட்களாக தடுப்பணை நீர்த்தேக்க பகுதியில் முழுமையாக தேக்கி வைக்கப்பட்டுள்ளது. நேற்று மேட்டூர் அணையில் இருந்து, 1,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது, தடுப்பணையின் முழு கொள்ளளவான, 9 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால், கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ