சேதமான தண்ணீர் தொட்டி சீரமைக்க மக்கள் கோரிக்கை
சேதமான தண்ணீர் தொட்டி சீரமைக்க மக்கள் கோரிக்கைஎலச்சிபாளையம்,: எலச்சிபாளையம் யூனியன், நாய்க்கடிபுதுார் பகுதியில், கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், வையப்பமலை சாலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, இந்த தொட்டி சிதிலமடைந்து, சிலாப் கற்கள் உதிர்ந்தும், ஒருசில இடங்களில் விரிசல் ஏற்பட்டும் காணப்படுகிறது. இதேநிலை தொடர்ந்தால், தொட்டி முழுவதும் சிதிலமடைந்து எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் மக்கள் பயணிக்கும் சூழல் உள்ளது. எனவே, சிதிலமடைந்த தண்ணீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.