கொல்லிமலை கொண்டை ஊசி வளைவில்சுற்றுச்சூழலை பாதுகாக்க குப்பை தொட்டி
கொல்லிமலை கொண்டை ஊசி வளைவில்சுற்றுச்சூழலை பாதுகாக்க குப்பை தொட்டிசேந்தமங்கலம், : நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதுபோல் வரும் சுற்றுலா பயணிகள், மட்காத குப்பையான பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டுவந்து மலைப்பாதை சாலையில் வீசிவிட்டு செல்கின்றனர்.இந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் மட்காமல், கொண்டை ஊசி வளைவுகளில் குவிந்து கிடக்கின்றன. இதனால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், மலைப்பாதையில் பல இடங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை, குரங்குகள் எடுத்துச்சென்று வனப்பகுதியில் போட்டு விடுகின்றன. இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.எனவே, இதை தடுக்கும் வகையில், ஊரக வளர்ச்சித்துறை மூலம், காரவள்ளியில் இருந்து கொல்லிமலை சோளக்காடு வரை, 43, 55வது கொண்டை ஊசி வளைவு, நாச்சியார் கோவில், உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட இடங்களில், நவீன குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த குப்பை தொட்டிகள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால், இதை சுற்றுலா பயணிகள் அதிகம் பயன்படுத்த துவங்கி உள்ளனர்.