உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குழாய் உடைப்பை சரிசெய்ய தோண்டிய பள்ளத்தால் அவதி

குழாய் உடைப்பை சரிசெய்ய தோண்டிய பள்ளத்தால் அவதி

குழாய் உடைப்பை சரிசெய்ய தோண்டிய பள்ளத்தால் அவதிவெண்ணந்துார், : வெண்ணந்துார் டவுன் பஞ்சாயத்து வழியாக, காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் ராசிபுரம் செல்கிறது. இந்த குழாயில், வெண்ணந்துார் பஸ் ஸ்டாப் அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய, கடந்த, ஐந்து நாட்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், வெண்ணந்துார் பஸ் ஸ்டாப் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்து உடனடியாக பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !