மேலும் செய்திகள்
69 பயனாளிகளுக்கு ரூ.46.49 லட்சம் நலத்திட்ட உதவி
15-Feb-2025
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்நலத்திட்ட உதவிகள் வழங்கல் நாமக்கல்:திருச்செங்கோட்டில் நடந்த, மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமிற்கு, நாமக்கல் கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி., மாதேஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அதில், மல்லசமுத்திரம் அடுத்த மேல்முகம் ஊராட்சி, சத்யா நகரில், 29 பயனாளிகளுக்கு, 6 லட்சத்து 57 ரூபாய் மதிப்பிலும், மங்களம் ஊராட்சியில், 30 பயனாளிகளுக்கு, 12 லட்சம் ரூபாய் மதிப்பிலும், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், கோவில்பாளையத்தில், 28 பயனாளிகளுக்கு, 10 லட்சத்து, 71 ஆயிரம் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், பள்ளிபாளையம் அடுத்த பல்லக்காபாளையம் ஊராட்சியில், 22 பயனாளிகளுக்கு, 19 லட்சத்து 60 லட்சம் ரூபாய் மதிப்பிலும், குப்பாண்டம்பாளையம் ஊராட்சியில், 34 பயனாளிகளுக்கு, 35 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலும் என மொத்தம், 143 பயனாளிகளுக்கு, 83 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாம்களில் ஆர்.டி.ஓ.,க்கள் சுமன், சுகந்தி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ரவிச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
15-Feb-2025