உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாசி மகத்தை முன்னிட்டு நடராஜருக்கு பூஜை

மாசி மகத்தை முன்னிட்டு நடராஜருக்கு பூஜை

மாசி மகத்தை முன்னிட்டு நடராஜருக்கு பூஜைப.வேலுார்:-மாசி மகத்தை முன்னிட்டு, ப.வேலுார், சுல்தான்பேட்டையில் உள்ள திருஞானசம்பந்தர் மடாலயத்தில், விநாயக பெருமான், முருகர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், திருஞானசம்பந்தர், சுந்தரர், நாவுக்கரசர், மாணிக்கவாசகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு, வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நேற்று நடந்தது. தொடர்ந்து, மேடைக்கு முன் கலசங்கள் வைக்கப்பட்டு, தமிழ் முறைப்படி திருவாசகம், தேவாரம் மற்றும் திருவெண்பாவை ஓதலுடன் பூர்ணாகுதி சமர்ப்பிக்கப்பட்டு சிவகாமசுந்தரி உடணாகிய நடராஜ பெருமானுக்கு மங்கள வாத்தியம், கைலாய வாத்தியம், சங்கநாதம் முழங்க தீபாராதனை காட்டப்பட்டது.சிவனடியார்கள், ஊர் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, திருஞானசம்பந்தர் மடாலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை