உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆப்பரேட்டர்களுக்குஎச்.டி., பாக்ஸ்களை வழங்க அறிவுரை

ஆப்பரேட்டர்களுக்குஎச்.டி., பாக்ஸ்களை வழங்க அறிவுரை

ராசிபுரம்: எச்.டி., பாக்ஸ்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க, அரசு கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.ராசிபுரம் பகுதியில் இயங்கி வரும் அரசு கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம் ராசிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. அரசு கேபிள், 'டிவி' தாசில்தார் ராஜா தலைமை வகித்தார் ராசிபுரம் கேபிள் ஆப்பரேட்டர் சங்கர், தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' தலைமை அலுவலக துணை மேலாளர் மணிகண்டன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அப்போது, தாசில்தார் ராஜா பேசியதாவது:ராசிபுரம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர்கள் உள்ளனர். அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், எச்.டி., செட்டப் பாக்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர்கள் இதனை பெற்றுக்கொண்டு, சந்தாதாரர்களுக்கு வழங்கி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்ட கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ