மேலும் செய்திகள்
புகையிலை பதுக்கியவர் கைது
28-Dec-2024
பல்வேறு மாவட்டங்களுக்குசோளத்தட்டு அனுப்பும் பணி தீவிரம்வெண்ணந்துார், : அத்தனுார் பகுதி விவசாயிகள், சோளத் தட்டுகளை பண்டல், பண்டலாக சுற்றி, பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.வெண்ணந்துார் ஒன்றியம், அத்தனுார் பகுதியில் ஏராளமான விவசாயிகள் சோளம் நடவு செய்திருந்தனர். தற்போது அவர்கள் அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சோளத்தை தங்களுக்கு எடுத்துக் கொண்டு, அதில் கிடைக்கும் தட்டுகளை பண்டல் பண்டலாக இயந்திரம் மூலம் சுற்றி, அதனை பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து அத்தனுார் விவசாயி ஆறுமுகம் கூறியதாவது:வெண்ணந்துார் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில், சோளம் அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. சோளம் அறுவடை செய்து, அதில் கிடைக்கும் சோளத்தை மட்டும் நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். ஆடு, மாடுகளுக்கு தேவைப்படுவோர் சோளத்தட்டுகளை எடுத்துக் கொள்கின்றனர். மீதமுள்ள சோளம் தட்டுகளை பண்டல், பண்டலாக சுற்றி சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களுக்கு அனுப்பி விடுவோம். ஒரு சோளத்தட்டு பண்டல், 150 முதல், 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு கூறினார்.
28-Dec-2024