மேலும் செய்திகள்
அன்னதானம் வழங்கல்: 4 டன் குப்பை அகற்றம்
16-Jan-2025
பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள்வெறிச்சோடிய பள்ளிப்பாளையம் நகரம்பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் நகரம் மற்றும் கிராம புறத்தில் இருந்து, ஏராளமானோர் பழனிக்கு பாதயாத்திரை சென்றுள்ளதால், ஊரே வெறிச்சோடி காணப்படுகிறது.ஆண்டுதோறும் பள்ளிப்பாளையம் நகரம், கிராம புறத்தில் இருந்து ஏராளமானோர் பழனிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். இந்தாண்டு மார்கழி கடைசி வாரத்தில் இருந்து, மாலை அணிந்து விரதம் இருந்து, தை 1 முதல் பழனிக்கு பாதயாத்திரை செல்ல தொடங்கினர். சுற்று வட்டாரத்தில், 70 சதவீதம் பேர் பழனிக்கு சென்று விட்டதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும், ராஜவீதி, ஆர்.எஸ்.சாலை, காந்திபுரம் வீதி, காவிரி, ஆவத்தி பாளையம், வெப்படை மற்றும் குடியிருப்பு பகுதிகள், சாலைகள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. பாதயாத்திரைக்கு சென்றவர்களில் பெரும்பாலானோர் விசைத்தறி தொழிலாளர்கள் என்பதால், விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் ஓட்டல்கள், டீக்கடைகள், பேக்கரி உள்பட பல கடைகளும் மூடப்பட்டுள்ளன.
16-Jan-2025