உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காளிப்பட்டி கந்தசாமி கோவிலில்கொடியேற்றத்துடன் விழா துவக்கம்

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில்கொடியேற்றத்துடன் விழா துவக்கம்

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில்கொடியேற்றத்துடன் விழா துவக்கம்மல்லசமுத்திரம், : காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா தொடங்கியது.சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில், காளிப்பட்டி கந்தசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று தேரோட்ட விழா வெகுவிமரிசையாக நடக்கும்.அதன்படி, வரும், 11ல் தைப்பூசத்தன்று மதியம், 2:30 மணிக்கு, ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில், திருத்தேர் வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதையொட்டி, நேற்று மதியம், 1:00மணிக்கு கொடியேற்ற அபிஷேம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு பருத்திப்பள்ளிநாடு செங்குந்த முதலியார்கள் அளித்த கொடிச்சேலையால் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கியது.இன்றும், நாளையும் மதியம், 1:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. 10 இரவு, 9:00 மணிக்கு, சுவாமிக்கு திருக்கல்யாண வைபோகம் நடந்து, சுவாமி திருத்தேருக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. 11ல் திருத்தேர் வடம் பிடித்தலும், 12ல் சுவாமிக்கு சிறப்பு சந்தனகாப்பு அலங்காரமும், 13ல் சத்தாபரண மகாமேருவும், 14ல் வசந்த விழாவுடன் திருவிழா முடிவடைகிறது. விழாவின், 8 நாட்களும் இரவு, 7:00 மணிக்கு, கோவிலைச்சுற்றி அலங்கரிக்கப்பட்ட மின் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. தற்போது, பக்தர்கள் வசதிக்காக, தற்காலிக கூடாரம், கடைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. விழா ஏற்பாடுகளை, செயல் அலுவலர் கிருஷ்ணன், பரம்பரை அறங்காவலர் மற்றும் பூஜாரி சரஸ்வதி சதாசிவம் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை