நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவிஸ்கேட்டிங் போட்டியில் சாதனை
நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவிஸ்கேட்டிங் போட்டியில் சாதனைநாமக்கல்:நாமக்கல் மாவட்டம், காவேட்டிப்பட்டி குறிஞ்சி மெட்ரிக் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி கவிஷ்ணா, ரோலர் ஸ்போர்ட்ஸ் பெடரேசன் ஆப் இந்தியா சார்பில், நாமக்கல் நவோதயா அகாடமி பள்ளியில் நடந்த, மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொண்டார். இதில், 20 பள்ளிகளை சேர்ந்த, 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில், 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவி கவிஷ்ணா இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதே மாணவி, மாவட்ட அளவில் நாமக்கல் ஸ்பைரோ பப்ளிக் பள்ளியில் நடந்த, 12 வயதுக்குட்பட்டோர் ஸ்கேட்டிங் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.மாணவியை, பள்ளி தாளாளர் தங்கவேல் பாராட்டி பரிசு வழங்கினார். மேலும் மாணவிக்கு, பள்ளி இயக்குனர்கள், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.