உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மத்திய அரசு ஆசிரியர்களுக்குஇணையான ஊதியம் கேட்டு தீர்மானம்

மத்திய அரசு ஆசிரியர்களுக்குஇணையான ஊதியம் கேட்டு தீர்மானம்

மத்திய அரசு ஆசிரியர்களுக்குஇணையான ஊதியம் கேட்டு தீர்மானம்ராசிபுரம்:மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என, தமிழக ஆசிரியர் மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்துார் ஒன்றியங்களின் வட்ட கூட்டம் ராசிபுரத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் சுப்ர மணியன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் முருகசெல்வராசன் இயக்க உரையாற்றினார். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், மத்திய அரசுப்பள்ளி ஆசிரியருக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டின் இடைநிலை, தொடக்க நிலை ஆசிரியருக்கு, 1.6.2006 முதல் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். சட்டசபை தேர்தல் வாக்குறுதியின்படி, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை ஆசிரியர்களுக்கு தொடர்ந்து தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும்.தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, மாநில பணிமூப்பு முறையை திணிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர், -அரசு ஊழியர்களின் வாழ்வாதாரமான, 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு வரும் 25ம் தேதி நாமக்கல் பூங்கா சாலையில் நடத்தும் மறியல் போராட்டத்தில், ராசிபுரம் வட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில், 250 ஆசிரியர்கள் கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ