உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மும்மொழி கொள்கையை எதிர்த்து தி.மு.க., மாணவரணி ஆர்ப்பாட்டம்

மும்மொழி கொள்கையை எதிர்த்து தி.மு.க., மாணவரணி ஆர்ப்பாட்டம்

மும்மொழி கொள்கையை எதிர்த்து தி.மு.க., மாணவரணி ஆர்ப்பாட்டம் நாமக்கல், தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நாமக்கல் - மோகனுார் சாலை, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், மத்திய அரசை கண்டித்தும், மும்மொழி கொள்கைக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் மும்மொழி கொள்கை, தமிழகத்திற்கு கல்வி நிதியை ஒதுக்காதது உள்ளிட்டவற்றை கண்டித்து கோஷம் எழுப்பினர். முன்னதாக, நாமக்கல் அண்ணாதுரை சிலையில் இருந்து, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் வரை மாணவர் அமைப்பினர் ஊர்வலமாக சென்றனர்.இதில், கிழக்கு மாவட்ட, தி.மு.க., மாணவரணி அமைப்பாளர் சத்தியசீலன், துணை அமைப்பாளர்கள் கார்த்தி, கவுதம், சக்திவேல் உள்ளிட்ட இந்திய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு, சமூக நீதி மாணவர் இயக்கம், ஆர்.எஸ்.எப்., முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பு, ம.தி.மு.க., மாணவரணி, தமிழ் மாணவர் மன்றம் போன்ற அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை