பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமேஉயர்நிலைப்பள்ளி ஹெச்.எம்., பணி
பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமேஉயர்நிலைப்பள்ளி ஹெச்.எம்., பணிநாமக்கல்:தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் அருள்செல்வன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கண்ணன் வரவேற்றார். மாநில தணிக்கையாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் மாநில மகளிர் அணி செயலாளர் வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறுவன தலைவர் மாயவன் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார்.கூட்டத்தில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடம் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை, காலம் தாழ்த்தாமல் இந்த கல்வியாண்டிலேயே அமல்படுத்த வேண்டும். மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, ஒவ்வொரு பாடத்திற்குள் அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்குவது போல், பத்தாம் வகுப்பு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கும், 10 சதவீதம் அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு, பணி பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்வு பணி மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை, இரண்டு மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.