உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அமைச்சர் பொன்முடி பதவி விலகவிஸ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்

அமைச்சர் பொன்முடி பதவி விலகவிஸ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்

அமைச்சர் பொன்முடி பதவி விலகவிஸ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்நாமக்கல்:வனத்துறை அமைச்சர் பொன்முடி பதவி விலகக்கோரி, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சிவகாம சுந்தரம் தலைமை வகித்தார். அதில், ஹிந்து மதத்தையும், சைவ, வைணவத்தையும், பெண்களையும் இழிவாக பேசிய, தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியை பதவியிலிருந்து விடுவிக்கக்கோரி கோஷம் எழுப்பினர். மாநில இணை அமைப்பாளர் ரகுபதி, ஈரோடு கோட்ட செயலாளர் தேவன், மாவட்ட பொருளாளர் ஹரிஷ், நாமக்கல் மாவட்ட இணை செயலாளர் யோகேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை