உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஏ.டி.எம்., பாதுகாப்பு குறித்து போலீசார் சோதனை

ஏ.டி.எம்., பாதுகாப்பு குறித்து போலீசார் சோதனை

ஏ.டி.எம்., பாதுகாப்பு குறித்து போலீசார் சோதனைநாமக்கல், அக். 4-நாமக்கல் ஏ.டி.எம்., மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசார் சோதனை நடத்தினர்.கேரள மாநிலத்தில் மூன்று ஏ.டி.எம்.,களை உடைத்து, 65 லட்சம் ரூபாயுடன் வட மாநில கொள்ளை கும்பல் தமிழகம் நோக்கி வந்த போது, நாமக்கல் மாவட்ட போலீசார் வெப்படை அருகே சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த சம்பவத்தில் கொள்ளையன் ஒருவர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியானார். மற்றொரு கொள்ளையன் பலத்த காயமடைந்தார். ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.ஏ.டி.எம்., கொள்ளை கும்பல் பிடிபட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள வங்கி ஏ.டி.எம்., மையங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்தந்த மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு, தமிழக டி.ஜி.பி., சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாவட்டம் முழுவதும் நேற்று முக்கிய பகுதிகளில் உள்ள வங்கி ஏ.டி.எம்.,களில் எஸ்.பி., ராஜேஸ் கண்ணன் தலைமையில், ஏ.எஸ்.பி.,ஆகாஷ் ஜோஷி, இன்ஸ்பெக்டர்கள் கபிலன், வேதப்பிறவி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வராஜ் உள்ளிட்ட போலீசார் சோதனை நடத்தினர்.குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள வங்கி ஏ.டி.எம்., இயந்திரங்களின் தரம், பணம் இருப்பு வைப்பு எவ்வளவு, பாதுகாவர்கள் நியமனம் உள்ளதா போன்றவை குறித்து ஆய்வு நடத்தி சென்றனர். பரமத்தி சாலை, துறையூர் சாலை, நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்சந்தை பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை