முதல்வர் மருந்தகம் அமையவுள்ளஇடத்தில் கலெக்டர் ஆய்வு
முதல்வர் மருந்தகம் அமையவுள்ளஇடத்தில் கலெக்டர் ஆய்வுநாமக்கல்:நாமக்கல் மாவட்டம், அணியாபுரம், புதுச்சத்திரம் ஆகிய இடங்களில் அமையவுள்ள முதல்வர் மருந்தகம் இடத்தில், முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டார்.குறைந்த விலையில் (ஜெனரிக்) மருந்து, மாத்திரைகளையும், பிற மருந்துகளையும் மக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதற்கட்டமாக, 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என்று கடந்த ஆக.,15ல், முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமையவுள்ள அணியாபுரம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், செல்லப்பம்பட்டி ஆகிய இடங்களில் மாவட்ட கலெக்டர் உமா, ஆய்வு மேற்கொண்டார். மேலும், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில், செயல்பட்டு வரும் மாவட்ட முதல்வர் மருந்தக சேமிப்பு கிடங்கில் ஆய்வு மேற்கொண்டு, மருந்து பொருட்களின் இருப்பு, மருந்தகங்களுக்கு வினியோகிக்கப்படும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள அம்மா மருந்தகத்தில் மருந்து பொருட்களின் இருப்பு பதிவேடு, விற்பனை விபரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.