உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விவசாயிகளுக்கு தனிக்குறியீடுபதிவு செய்யும் பணி தீவிரம்

விவசாயிகளுக்கு தனிக்குறியீடுபதிவு செய்யும் பணி தீவிரம்

விவசாயிகளுக்கு தனிக்குறியீடுபதிவு செய்யும் பணி தீவிரம்ராசிபுரம்:நாமகிரிப்பேட்டை வட்டார அனைத்து கிராம விவசாயிகளுக்கு, தனிக்குறியீடு எண் வழங்குவதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட இடங்களான தண்ணீர்பந்தல்காடு, அரியாகவுண்டம்பட்டி, வெள்ளக்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வேளாண்துறை அலுவலர்கள் மூலம் இப்பணி நடக்கிறது. நில விபரங்களுடன், விவசாயிகளின் விபரம் மற்றும் நில உடமை வாரியான விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தனிக்குறியீடு எண் வழங்கப்படுகிறது. விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே, அவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு அடையாள எண் வழங்கப்படுகிறது. தொடர்ந்து நடக்கும் இந்த முகாமில் கலந்துகொள்ளும் விவசாயிகள் நில ஆவணங்களான பட்டா, சிட்டா, ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைந்த தொலைபேசி எண் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என, வேளாண்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை