தேரோட்டம் நடந்த பகுதியில்மின் இணைப்பு வழங்க
- ல்குமாரபாளையம்:குமாரபாளையத்தில், தேரோட்டம் நடந்த பகுதியில் மின் வாரியத்தினர் உடனுக்குடன் மின் இணைப்பு வழங்கினர். குமாரபாளையம், காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா நேற்று நடந்தது. கோவில் வளாகத்தில் துவங்கிய தேரோட்டம் ராஜ வீதி, சேலம் சாலை, தம்மண்ணன் சாலை, புத்தர் வீதி ஆகிய பகுதிகளில் நடந்தது. தேர் ஒவ்வொரு பகுதியை கடந்ததும், துண்டிக்கப்பட்ட மின் ஒயர்களை உடனுக்குடன் இணைத்து, மின்வாரிய பணியாளர்கள் மின் இணைப்பு கொடுத்து வந்தனர். இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.