மேலும் செய்திகள்
பைக்கிலிருந்து விழுந்த 2 பேர் பலி
11-Mar-2025
பழனி முருகன் கோவிலில்மோகனுார் பா.ஜ., நிர்வாகி பலி மோகனுார்:நாமக்கல் மாவட்டம், மோகனுார் அடுத்த ஆரியூரை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் செல்வமணி, 46; மோகனுார் ஒன்றிய பா.ஜ., தலைவராக இருந்தார். மனைவி நதியா, 43; அரசு பள்ளி ஆசிரியர். இவர்களது மகன் கவுசிக்பூபதி, 17, பிளஸ் 2 படிக்கிறார்.இந்நிலையில், சபரிமலைக்கு விரதமிருந்த செல்வமணி, கடந்த, 17ல், அப்பகுதியை சேர்ந்த, 11 பேருடன் கோவிலுக்கு சென்றார். நேற்று, பழனி கோவிலுக்கு வந்தனர். அங்கு சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர். அப்போது, செல்வமணிக்கு மூச்சத்திணறல் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதையறிந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.
11-Mar-2025