உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பெண் குழந்தை பிறப்பு விகிதம்குறைந்தால் சமுதாயம் சீர்கேடாகு

பெண் குழந்தை பிறப்பு விகிதம்குறைந்தால் சமுதாயம் சீர்கேடாகு

'பெண் குழந்தை பிறப்பு விகிதம்குறைந்தால் சமுதாயம் சீர்கேடாகும்'நாமக்கல்:சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டம் சார்பில், ஒருநாள் கருத்தரங்கு, நாமக்கல்லில் நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது:குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் நேரம் ஒதுக்கீடு செய்து அவர்களுடன் உரையாட வேண்டும். பாலின வேறுபாடு காரணமாக, கருக்கலைப்பு உள்ளிட்ட தவறான செயல்பாடுகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.நாமக்கல் மாவட்டத்தில், ஆண் குழந்தைகளின் பிறப்பை விட பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகமாக இருந்தாலும், சில இடங்களில் பாலின வேறுபாடு காணப்படுகிறது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்தால், சமுதாய சீர்கேடு ஏற்படும். திருமணம் மற்றும் வாழ்க்கை முறையில் ஒழுக்ககேடு ஏற்படும். எனவே, பெண் குழந்தைகள் பிறப்பு மற்றும் பாதுகாப்பில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை